அமெரிக்காவில் பெண்கள் நூதன போராட்டம்!


அமெரிக்காவில் பெண்கள் நூதன போராட்டம்!
x
தினத்தந்தி 6 Sep 2021 10:42 AM GMT (Updated: 6 Sep 2021 10:42 AM GMT)

அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் மேற்கொண்டுள்ள நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது. மேற்கண்ட நாடுகளில் மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வரும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமல்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு சட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் வயிற்றில் சிசுவின் இதயதுடிப்பு கேட்க தொடங்குவதற்கு முன்னதாகவே கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் 6 வார காலத்திற்குள் கருவுற்றிருப்பதே பெண்கள் பலருக்கு தெரிய வர வாய்ப்பில்லை என்பதால் இந்த சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு வருகின்றனர். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் ஆண்கள் தங்களுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாது என அறிவித்துள்ளனர். இந்த நூதன போராட்டத்திற்கு நடிகையும், பாடகியுமான பேட் மில்லர் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான இந்த சட்டத்தை எதிர்த்து அங்கு உள்ள சுப்ரீம் கோர்ட்டில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில் இதனை விசாரித்த கோர்ட் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என பின் வாங்கி கொண்டது. இதன் பின்னர் தாங்களாகவே போராட்டத்தில் குதித்துள்ளனர் பெண்கள். அந்த வகையில் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story