ஹைதி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,248 ஆக உயர்வு


ஹைதி நிலநடுக்கம்:  பலி எண்ணிக்கை 2,248 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 Sep 2021 9:55 AM GMT (Updated: 7 Sep 2021 9:55 AM GMT)

ஹைதி நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,248 ஆக உயர்வடைந்து உள்ளது.




போர்ட் ஆப் பிரின்ஸ்,

ஹைதி நாட்டில் கடந்த ஆகஸ்டு 14ந்தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது.  இந்த நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதனால், மக்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.  அவர்களில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஹைதியில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,248 ஆக அதிகரித்துள்ளது என ஹைதி அரசு தெரிவித்துள்ளது. மேலும், 329 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
இந்த நிலநடுக்கத்தில் 53 ஆயிரத்திற்கும் வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.  83 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன.

நிலநடுக்கத்தில் 12,763 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  அதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story