தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது: வெள்ளை மாளிகை


தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது: வெள்ளை மாளிகை
x

தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் அமையும் தலீபான்களின் இடைக்கால அரசில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தலீபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.

வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள். பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார் என்று தலீபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள தலீபான் தலைமையிலான புதிய அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், “ தலீபான்கள் அரசை அங்கீகரிப்பதில் எந்த அவசரமும் இல்லை. தலீபான்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்.  உலக நாடுகள் பார்த்து கொண்டிருக்கின்றன. அதேபோல் அமெரிக்காவும் தலீபான்கள் நடவடிக்கையை கண்காணிக்கும்” என்றார். 

Next Story