மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு


மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு
x
தினத்தந்தி 8 Sep 2021 2:54 AM GMT (Updated: 8 Sep 2021 2:54 AM GMT)

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

மெக்சிகோ, 

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியதாக நில அதிர்வு நிபுணர்கள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.  மேலும் இதனால் அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 8:47 மணிக்கு ஏற்பட்டது. மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஒரு நகரம் மற்றும் முக்கிய துறைமுகமான அகபுல்கோவின் வடக்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இப்பகுதி மெக்ஸிகோ நகரத்திற்கு தெற்கே 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) மையம் தெரிவித்துள்ளது. 

Next Story