உலக செய்திகள்

தலீபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார் + "||" + US President Joe Biden says China has problems with the Taliban

தலீபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்

தலீபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்
தலீபான்களுடன் சீனாவுக்கு பிரச்சினைகள் உள்ளன அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சொல்கிறார்.
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அந்த நாடு முழுவதுமாக தலீபான்கள் வசமானது. இதைத்தொடர்ந்து தலீபான்கள் தற்போது தங்களது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். முன்னதாக தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் முதல் நாடாக அவர்களுக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்தது. அதேபோல் தலீபான்களும் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளியான என தெரிவித்துள்ளனர்.


இந்தநிலையில் தலீபான்களுடன் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தலீபான்களுக்கு சீனா நிதியுதவி செய்வது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானதா என ஜோ பைடனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜோ பைடன் "தலீபான்களிடம் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய சீனா சில ஏற்பாடுகளை செய்ய முயன்று வருவதை உறுதியுடன் கூற முடியும்" என கூறினார்.

மேலும் அவர் சீனாவை தவிர பாகிஸ்தான், ரஷியா மற்றும் ஈரான் போன்ற அண்டை நாடுகள் தலீபான்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷின் ‘கர்ணன்’-ஐ விட ‘ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் - ராதா ரவி சொல்கிறார்
மோகன் ஜி இயக்கி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2. எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் - ஜோ பைடன் அறிவிப்பு
அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
3. ‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்
‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்.
4. காபூல் விமான நிலைய தாக்குதல்; “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரை
காபூல் விமான நிலைய தாக்குதலை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடும் எனவும் சூளுரைத்துள்ளார்.
5. ‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்
‘டோக்கியோ தோல்வி குறித்து வருந்துவதற்கு நேரமில்லை’ வினேஷ் போகத் சொல்கிறார்.