உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் 10 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு + "||" + 10 lakh people suffer in darkness due to the terrible earthquake in Mexico

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் 10 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் 10 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குரேரோ மாகாணத்தின் அகாபுல்கோ நகரில் நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குரேரோ மாகாணத்தின் அகாபுல்கோ நகரில் நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.


இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அகாபுல்கோ நகரம் மட்டும் இன்றி தலைநகர் மெக்சிகோ சிட்டி உள்பட அதனை சுற்றியுள்ள பல நகரங்களும் கடுமையாக குலுங்கியது.இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு அலறியடித்தபடி வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் அகாபுல்கோ மற்றும் அதன் அருகே உள்ள பல நகரங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. அகாபுல்கோ நகரில் தேவாலயம் ஒன்று முற்றிலுமாக இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. குரேரோ மாகாணத்தின் கொயுகா டி பெனிடெசிஸ் நகரில் நிலநடுக்கத்தின் போது மின் கம்பம் சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே நிலநடுக்கம் காரணமாக அகாபுல்கோ, மெக்சிகோ சிட்டி, மோரேலோஸ், ஓக்சாகா ஆகிய நகரங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

மின் இணைப்பை மீண்டும் கொண்டுவரும் பணியில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவின் பாலி தீவில் 4.8 ரிக்டரில் நிலநடுக்கம்: 3 பேர் பலி
இந்தோனேசியாவிலுள்ள பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர்.
2. லா பால்மா தீவில் ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
எரிமலை வெடித்துள்ள லா பால்மா தீவில் இன்று ரிக்டர் 4.5 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
கிரேக்க நாட்டிலுள்ள கிரீட் தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. ஹவாய் தீவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
ஹவாயிலுள்ள கடற்கரை பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. லடாக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவு
லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.