சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை


சிறையில் இருந்து தப்பிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை
x
தினத்தந்தி 8 Sep 2021 11:25 PM GMT (Updated: 8 Sep 2021 11:25 PM GMT)

சிறையில் இருந்து தப்பிச்சென்ற பாலஸ்தீன கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

ஜெருசலேம், 

இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறை அறையில் உள்ள கழிவறை வழியாக சுரங்கம் தோண்டி தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இஸ்ரேல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், தப்பியோடிய பாலஸ்தீன கைதிகள் மேற்கு கரையில் அமைந்துள்ள ஜெனின் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் உள்ள முகாம்களில் கைதிகளின் உறவினர்கள் வசித்து வருகின்றனர். இதனால், அவர்களை சந்திக்க சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிறையில் இருந்து தப்பியோடிய பாலஸ்தீன கைதிகளின் உறவினர்கள் வசித்து வரும் மேற்கு கரையின் ஜெனின் பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளின் உறவினர்களிடம் இஸ்ரேலிய படையினர் விசாரணை நடத்தினர். 

இதில் கைதிகளின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன கைதிகள் 6 பேரும் ஜெனின் பகுதியில் உள்ள முகாம்களில் மறைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் அந்த முகாம்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்த உள்ளனர். 

Next Story