உலக செய்திகள்

அமெரிக்கா: ஐடா சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு + "||" + Hurricane Ida death toll jumps to 82

அமெரிக்கா: ஐடா சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அமெரிக்கா: ஐடா சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு
அமெரிக்காவில் ஐடா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம், மின்தடை உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் பல மாகாணங்களை கடந்த வாரம் ஐடா சூறாவளி புயல் புரட்டி எடுத்தது. லூயிசியானா, நியூயார்க், நியூஜெர்சி, நியூ ஆர்லென்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஐடா புயலால் பல்வேறு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐடா புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஐடா புயல், கனமழை உள்ளிட்ட பாதிப்புகளால் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஐடா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. புயலால் ஏற்பட்ட வெள்ளம், மின் தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இதுவரை 41.3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
3. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
4. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.