உலக செய்திகள்

தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது: அகமது மசூத் + "||" + Resistance Front likely to declare parallel govt in Afghanistan, calls Taliban rule illegitimate

தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது: அகமது மசூத்

தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது: அகமது மசூத்
தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்று கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதி தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் தலிபான்களை எதிர்த்து போராடி வந்தது. இதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதனிடையே இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர். தற்போது முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும் மற்றும் கொலை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்றும் இது ஆப்கானிஸ்தான், பிராந்தியம் மற்றும் உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் ஆப்கான் தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மக்களை தலீபான்களுக்கு எதிராக எழுச்சிபெறுவதற்கு அழைப்பு விடுத்த அவர், ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஷாங்காயின் அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SARC) மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற உலகளாவிய நிறுவனங்களையும் (OIC) தலீபான்களுடன் ஒத்துழைக்கக் கூடாது என்று அகமது மசூத் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடை: போராட்டம் நடத்தியவர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு
பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
2. ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தலீபான்கள் தடை
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
3. உயர் கல்வி கற்க பெண்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கும் தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.
4. ஆப்கானிஸ்தானில் வீதிகளில் இறங்கி எதிர்ப்பாளர்கள் போராட்டம் கூட்டத்தை கலைக்க தலீபான்கள் துப்பாக்கிச்சூடு
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அச்சுறுத்தலை மீறி எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கூட்டத்தைக் கலைக்க தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
5. தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது: வெள்ளை மாளிகை
தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.