உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் + "||" + China has reported 28 new cases of corona infection

சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்

சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 9 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 95,111 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் புதிதாக 8,733 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 118 பேர் பலி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. புதுச்சேரியில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 454 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. கேரளாவில் இன்று 11,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 82,738 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
புதுச்சேரியில் தற்போது 461 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.