அஸ்ட்ரா செனகா தடுப்பூசி: அரிதான நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பு - ஆய்வாளர்கள் கருத்து


அஸ்ட்ரா செனகா தடுப்பூசி: அரிதான நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பு - ஆய்வாளர்கள் கருத்து
x
தினத்தந்தி 9 Sep 2021 5:33 AM GMT (Updated: 9 Sep 2021 5:33 AM GMT)

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து,

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மிகவும் அரிதாக நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படும் அரிய வகை நோய் பாதிப்பானது நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது.

இது அஸ்ட்ரா செனகா, ஜான்சன்&ஜான்சன், மாடர்னா ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு மிகவும் அரிதாக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தடுப்பூசியால் ஏற்படும் இந்த பாதிப்பு ‘வாக்ஸ்செர்வியா’ என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த பாதிப்பு பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 59.2 கோடி தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டதில், வெறும் 833 பேருக்கு மட்டுமே இத்தகைய நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story