உலக செய்திகள்

காங்கோவில் மூளைக்காய்ச்சல் பரவுகிறது 120-க்கும் மேற்பட்டோர் சாவு + "||" + Encephalitis spreads in Congo More than 120 deaths

காங்கோவில் மூளைக்காய்ச்சல் பரவுகிறது 120-க்கும் மேற்பட்டோர் சாவு

காங்கோவில் மூளைக்காய்ச்சல் பரவுகிறது 120-க்கும் மேற்பட்டோர் சாவு
காங்கோவில் மூளைக்காய்ச்சல் பரவுகிறது 120-க்கும் மேற்பட்டோர் சாவு.
கின்ஷாசா,

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஜூலை மாதம் முதன் முதலாக மூளைக்காய்ச்சல் நோய் பரவத்தொடங்கியது. இதுவரை இந்த நோய்க்கு அங்கு 120-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த நோய், சூனியத்துடன் தொடர்புடையது என்று அந்த நாட்டுமக்கள் நம்புவதால் இதைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பிரான்ஸ் நாட்டுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ளஇந்த நோய் பாதிக்கப்பட்டவர்க், சிகிச்சை பெறுவதற்கு பதிலாக நோய் தங்களை பின்தொடராது என்ற நம்பிக்கையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்கின்றனர்.

காங்கோ அரசும், உலக சுகாதார அமைப்பும் நிலைமையை கட்டுப்படுத்த வடகிழக்கு மாகாணமான ஷோபோவுக்கு ஒரு குழுவை அனுப்பி உள்ளன.

இந்த மாகாணம்தான் மூளைக்காய்ச்சலின் மையப்பகுதியாக கூறப்படுகிறது.

அபாயகரமான நோயான மூளைக்காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சுவாசம் மற்றும் தொண்டை சளி துளிகள் வெளியே வந்து, அதன் மூலம் பிற மக்களுக்கு பரவுகிறது.