73-வது ஆண்டு நிறுவன நாள்: வடகொரியாவில் நள்ளிரவில் ராணுவ அணிவகுப்பு


73-வது ஆண்டு நிறுவன நாள்: வடகொரியாவில் நள்ளிரவில் ராணுவ அணிவகுப்பு
x
தினத்தந்தி 9 Sep 2021 6:05 PM GMT (Updated: 2021-09-09T23:35:47+05:30)

73-வது ஆண்டு நிறுவன நாள்: வடகொரியாவில் நள்ளிரவில் ராணுவ அணிவகுப்பு கிம் ஜாங் அன் பார்வையிட்டார்.

பியாங்யாங்,

வடகொரியா நாடு நிறுவப்பட்டதின் 73-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று முன்தினம் இரவில் பியாங்யாங் நகரில் நடந்தது. இந்த விழாவின்போது நள்ளிரவில் கண்கவர் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், கில் இல் சுங் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று பார்வையிட்டு, உற்சாகமாக கையசைத்தார். அதே நேரம் அவர் உரையாற்றியதாக தகவல் இல்லை.

அணிவகுப்பில் கலந்து கொண்ட வீரர்கள் ஆரஞ்சு ‘ஹஸ்மத்’ பாணி உடை அணிந்து காணப்பட்டனர்.

அணிவகுப்பில் விமானங்கள் விண்ணில் பறந்து சாகங்களை செய்து காட்டின.

பருமனான உடலை கொண்ட கிம் ஜாங் அன் தற்போது மெலிந்து காணப்படுகிறார். இதை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் ஊடகங்களில் அவரது தற்போதைய தோற்றம் வெளியிடப்பட்டது.

இந்த அணிவகுப்பு தொடர்பான ஊடக செய்திகளில் கிம் ஜாங் அன் சகோதரி மற்றும் உயர் அதிகாரியுமான கிம் யோஜாங் பற்றி எதுவும் குறிப்பிடப்படாதது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

Next Story