அமெரிக்க நகரத்தில் துப்பாக்கிச்சூடு 6 பேர் படுகாயம்


அமெரிக்க நகரத்தில் துப்பாக்கிச்சூடு 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 10 Sep 2021 8:08 PM GMT (Updated: 2021-09-11T01:38:23+05:30)

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வருகிறது. இந்தநிலையில் அங்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அங்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

Next Story