நேபாளத்தில் 4.5 மாதங்களுக்கு பின் பசுபதிநாத் கோவில் திறப்பு


நேபாளத்தில் 4.5 மாதங்களுக்கு பின் பசுபதிநாத் கோவில் திறப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 11:27 PM GMT (Updated: 10 Sep 2021 11:27 PM GMT)

நேபாளத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், 4.5 மாதங்களுக்கு பின்பு பசுபதிநாத் கோவில் திறக்கப்பட்டு உள்ளது.


காத்மண்டு,

நேபாள நாட்டில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பள்ளி, கல்வி, கோவில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.  இந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள பசுபதிநாத் கோவில் கடந்த 4.5 மாதங்களுக்கு பின்பு மீண்டும் நேற்று திறக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீதா அதிகாரி என்ற பெண் கூறும்போது, கோவிலை மீண்டும் திறந்த முதல் நாளிலேயே நான் வழிபட வரமுடிந்தது எனது அதிர்ஷ்டவசம் என்றே நான் நினைக்கிறேன்.  இங்கே வருவதற்கு நான் அலைந்து திரிந்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.


Next Story