அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.69 லட்சம் பேருக்கு கொரோனா


அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.69 லட்சம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Sep 2021 1:27 AM GMT (Updated: 11 Sep 2021 1:27 AM GMT)

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாஷிங்டன்,

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.  அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,69,114- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பதிப்பால் ஒரே நாளில் 1,733-பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 41,739,682- ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 31,820,994- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 92,41,699- ஆக உள்ளது. 

Next Story