உலக செய்திகள்

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் + "||" + China has reported 25 new cases of corona infection

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்

சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 17 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 21 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 95,153 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2. சீனாவில் புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
3. பள்ளிகளில் கொரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
4. 12-ந் தேதி தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
5. பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா
சீனா பூமியை கண்காணிப்பதற்கான புதிய செயற்கை கோள் ஒன்றை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.