உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37.7 கோடியை தாண்டியது + "||" + Vaccines administered so far in United States exceeded 377 million

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37.7 கோடியை தாண்டியது

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37.7 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 37.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 37,69,55,132 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 37,59,95,378 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 20,80,24,209 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 17,71,04,652 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு ரத்து - சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு
சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
2. அமெரிக்கா: மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? - பகீர் பின்னணி
அமெரிக்காவில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
3. "ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு" 69 வயதில் தந்தையாகும் ரஷிய அதிபர் புதின்...!
ரஷிய அதிபர் புதினின் 38 வயது ரகசிய காதலி அலினா கபேவா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
4. அமெரிக்காவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி 4 பேர் காயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
5. அமெரிக்காவில் பறக்கும் தட்டுக்கள் குறித்த வழக்கு - மே17-ந் தேதி விசாரணை
அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ந் தேதி மேற்கொள்ள உள்ளது.