ரஷ்யாவில் மேலும் 18,891 பேருக்கு கொரோனா தொற்று


ரஷ்யாவில் மேலும் 18,891 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 Sep 2021 11:26 AM GMT (Updated: 2021-09-11T16:56:39+05:30)

ரஷ்யாவில் மேலும் 18,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,891 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 71,21,516 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 1,425 பேருக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. தொற்று பாதிப்பு அதிகரிக்கும் விகிதம் 0.27 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 1,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 796 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,91,961 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,888 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 63,75,160 பேர் குணமடைந்துள்ளனர்.

Next Story