ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ


ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் துப்பாக்கியுடன் அமர்ந்துள்ள தலீபான்கள் ; வைரலாகும் போட்டோ
x
தினத்தந்தி 11 Sep 2021 12:30 PM GMT (Updated: 11 Sep 2021 12:30 PM GMT)

பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது.

காபூல்

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இந்நிலையில், தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, ஆப்கானிஸ்தானின் அதிபர் நான் தான் என அறிவித்திருந்தார். அவர் தனது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் இருந்துகொண்டு, தலீபான்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகளுடன் போராடி வருகிறார். அங்கு தலீபான்களுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் பயங்கர சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை, தலீபான்கள் கொடூரமாக சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். மோதலில் அவர் உயிரிழந்ததாக கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் பஞ்ச்ஷீரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக தலீபான்கள் அறிவித்தாலும் அதை தலீபான் எதிர்ப்புப் படை மறுத்துள்ளது. தொடர்ந்து மோதல் நீடித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, நூலகம் ஒன்றில் அமர்ந்தபடி அடிக்கடி வீடியோவில் பேசி அதை வெளியிட்டு வருவார் அம்ருல்லா சலே. அதே லைப்ரரியில் தலீபான் படையை சேர்ந்த ஒருவர் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

Next Story