இங்கிலாந்தில் 29,547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி


இங்கிலாந்தில் 29,547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
x
தினத்தந்தி 11 Sep 2021 8:42 PM GMT (Updated: 2021-09-12T02:12:06+05:30)

இங்கிலாந்தில் 29,547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார்.  இதனால் பாதிப்புகள் அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 71,97,662 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 156 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது.


Next Story