உயர் கல்வி கற்க பெண்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கும் தலீபான்கள்


உயர் கல்வி கற்க பெண்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கும் தலீபான்கள்
x
தினத்தந்தி 12 Sep 2021 8:16 AM GMT (Updated: 12 Sep 2021 8:16 AM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.  தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு இடம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய தலீபான் அரசின்  கல்வித்துறை மந்திரி அப்துல் பாகி ஹக்கானி, பெண்கள் உயர் கல்வி கற்பது தொடர்பான புதிய கொள்கைகளை வெளியிட்டார். 

அதில், “ பெண்கள்  பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கலாம். உயர்கல்வியும் பயிலலாம். ஆனால், வகுப்பறைகள் பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருக்கும். அதேபோல், பெண்கள் இஸ்லாமிய உடைகளையும் அணிவது கட்டாயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story