விமானத்தில் பெண்ணுடன் 4 ஆயிரம் கி.மீ தூரம் பயணம் செய்த பல்லி!


விமானத்தில் பெண்ணுடன் 4 ஆயிரம் கி.மீ தூரம் பயணம் செய்த பல்லி!
x
தினத்தந்தி 12 Sep 2021 8:58 AM GMT (Updated: 12 Sep 2021 8:58 AM GMT)

முதலில் நான் இதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த சிறிய பல்லி மிகவும் அதிர்ஷ்டசாலி.

லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த 47 வயதுடைய லிசா ரஸ்ஸல் எனும் பெண் ஒருவர் பார்படோஸ் எனும் தீவு நாட்டில் இருந்து, தனது சொந்த நாடான இங்கிலாந்திற்கு வந்துள்ளார். கிட்டத்தட்ட 4 ஆயிரம் கி.மீ  கடந்து வந்த லிசா,  வீட்டிற்கு வந்து தனது பெட்டியை திறந்து பார்க்கும் பொழுது தனது  ஆடைக்குள் சிறிய பல்லி ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார். இருப்பினும் அந்த பள்ளி இறந்து விட்டதாக நினைத்துள்ளார். அதன் பின்பு அந்த பல்லி நகரத் தொடங்கியதும் சந்தோஷத்தில் தான் சத்தமிட ஆரம்பித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், 

முதலில் நான் இதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இந்த சிறிய பல்லி மிகவும் அதிர்ஷ்டசாலி. 4 ஆயிரம் கிலோ மீட்டர், அதாவது 24 மணி நேரம் என்னுடன் இது விமானத்திலேயே பயணம் செய்து வந்துள்ளது. ஆனால் இந்தப் பல்லி பார்படோஸ் பகுதியிலிருந்தே வளர்ந்தது என்பதால் இங்கிலாந்தில் அதனால் இருக்க முடியாது. எனவே மிகுந்த கவலை இருந்தாலும் நான் தற்பொழுது அந்த பல்லியை சிறப்பு ஊர்வன காப்பாளர்களிடம் கொடுத்து விட்டேன். 

அங்கு அந்த பல்லி நன்றாக உள்ளது என்றார்.

Next Story