மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு


மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 12:18 AM GMT (Updated: 2021-09-13T05:48:13+05:30)

மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
கார்டோம்,

மத்திய சூடான் நாட்டில் கெஜிரா பகுதியில் அல்-காம்லின் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும், சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  13 பேர் காயமடைந்து உள்ளனர்.  அதிவிரைவாக செல்லுதல் மற்றும் தவறாக கடந்து செல்லுதல் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.
Next Story