உலக செய்திகள்

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம் + "||" + First Foreign Commercial Flight After Taliban Takeover Lands In Kabul

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்

தலீபான்கள் ஆட்சியில்  ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய முதல் வெளிநாட்டு விமானம்
தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன.
காபூல்,

ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின.

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும்,வெறும் 10 பயணிகள் மட்டுமே அதில் இருந்தனர்.  பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. 

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க  நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால், எத்தனை விமானங்கள் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையேயும் இயக்கப்படும் என்பதை இப்போதே கூற முடியாது” என்றார்.  முன்னதாக கடந்த 4-ந் தேதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சீன அதிபர் ஜின்பிங்குடன் இம்ரான் கான் தொலைபேசி உரையாடல்
சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடினர்.
2. மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3. டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் !
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
4. “ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்” - ரஷ்யா வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் நிதியுதவி அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
5. நாட்டின் தேசிய மகளிர் வாலிபால் அணி வீராங்கனையின் தலையை துண்டித்த தலீபான்கள்
நாட்டின் வாலிபால் அணியின் அனைத்து பெண் விளையாட்டு வீரர்களும் மோசமான சூழ்நிலையிலும் விரக்தியிலும் பயத்திலும் உள்ளனர்.