உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38 கோடியை தாண்டியது + "||" + Vaccines administered so far in the United States exceeded 38 million

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38 கோடியை தாண்டியது

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 38,02,41,903 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 37,94,72,220 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 20,94,37,152 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 17,86,92,875 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.9 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.9 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி
அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
3. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.8 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.8 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
5. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - 13 பேர் படுகாயம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.