ரஷ்ய அதிபர் புதினுடன் இம்ரான் கான் பேச்சு- ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை


ரஷ்ய அதிபர் புதினுடன் இம்ரான் கான் பேச்சு- ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 14 Sep 2021 3:49 PM GMT (Updated: 14 Sep 2021 3:49 PM GMT)

ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேசினார்.

இஸ்லமாபாத்,

ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது இரு தரப்பு விவகாரம், ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழல் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. 

மேலும், போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானை  உலக நாடுகள் தனித்து விடக்கூடாது எனவும் இம்ரான் கான் வலியுறுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

ஆப்கானிஸ்தானில் அமைதி, ஸ்திரதன்மை, பிராந்திய பாதுகாப்பு, செழுமை ஆகியற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இம்ரான் கான், பொருளாதார நெருக்கடியில் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story