குவாட் உச்சி மாநாட்டுக்கு சீனா எதிர்ப்பு


குவாட் உச்சி மாநாட்டுக்கு சீனா எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 6:12 PM GMT (Updated: 14 Sep 2021 6:12 PM GMT)

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாஷிங்டன் நகரில் 24-ந் தேதி நடத்துகிறார். இதில் பிரதமர் மோடி உள்பட அனைத்து தலைவர்களும் நேரடியாக கலந்து கொள்கிறார்கள்.

ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிற சீனா, இரு ஆசிய நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் கரம் கோர்த்து இந்த மாநாட்டில் பங்கேற்பது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. பீஜிங்கில் நேற்று பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் இதையொட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் சீனாவின் எரிச்சலை வெளிப்படுத்தினார். அப்போது அவர், "மற்ற நாடுகளைக் குறிவைத்து, பிரத்யேக குழுக்களை உருவாக்குவது, நாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காது. இது பிரபலம் ஆகாது. இதற்கு எதிர்காலம் இல்லை" என சாடினார்.

மேலும், " சம்மந்தப்பட்ட நாடுகள் காலாவதியாகிப்போன பனிப்போர் மன நிலையை, குறுகிய மனப்பான்மை கொண்ட புவிசார் அரசியல்போட்டி கருத்தை கைவிட்டு, பிராந்தியத்தில் மக்களின் அபிலாசைகளை சரியாக மதிக்க வேண்டும்" எனவும் கூறினார்.

Next Story