சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி


சீனாவில் மீண்டும் பரவி வரும் கொரோனா; புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 Sep 2021 3:32 PM GMT (Updated: 16 Sep 2021 3:32 PM GMT)

சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பீஜிங், 

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் கொரோனா காரணமாக அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு சென்றவர்களில் 31 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுனான் மாகாணத்தில் 22 பேருக்கும், குவாங்டாங் மாகாணத்தில் 3 பேருக்கும், சாங்காய் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் தலா 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

Next Story