இந்தியர்களுக்கான பயண தடை தளர்வுகள் அக்டோபர் 4 முதல் அமல்; இங்கிலாந்து அறிவிப்பு


இந்தியர்களுக்கான பயண தடை தளர்வுகள் அக்டோபர் 4 முதல் அமல்; இங்கிலாந்து அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Sep 2021 3:48 AM GMT (Updated: 18 Sep 2021 3:48 AM GMT)

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திய இந்தியர்களுக்கான பயண தடையில் இங்கிலாந்து தளர்வுகளை அறிவித்து உள்ளது.

லண்டன்,

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அறிவித்திருந்த சா்வதேச பயண விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு புதிய தளா்வுகளை அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட இந்தியர்களுக்கான பயண தடையில் இங்கிலாந்து தளர்வுகளை அறிவித்து உள்ளது.

இதன்படி, வருகிற அக்டோபர் 4ந்தேதி முதல், முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது, பி.சி.ஆர். பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என கூடுதல் சலுகையையும் அறிவித்து உள்ளது.

சா்வதேச நாடுகளை சிவப்பு, ஆம்பர் (பொன்நிறம்) மற்றும் பச்சை என பல வண்ணங்களில் இங்கிலாந்து
வரிசைப்படுத்தி வைத்திருந்தது.  இவற்றில் இந்தியா ஆம்பர் வண்ண பட்டியலில் இருந்தது.  சிவப்பு, ஆம்பர் வண்ண பட்டியலில் இருந்த நாடுகளை சோந்தவா்கள் இங்கிலாந்து செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த சூழலில், சிவப்பு பட்டியல் தவிர மட்டுமே இனி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  எனினும், பயண தடை பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் உள்ளன.


Next Story