ஜப்பானில் சாந்து புயல் தாக்குதல்: 5 பேர் காயம்; 49 விமானங்கள் ரத்து


ஜப்பானில் சாந்து புயல் தாக்குதல்:  5 பேர் காயம்; 49 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 18 Sep 2021 6:44 AM GMT (Updated: 18 Sep 2021 7:09 AM GMT)

ஜப்பானில் சாந்து புயல் பாதிப்புகளை தொடர்ந்து 49 விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.


டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் சாந்து என பெயரிடப்பட்ட புயல் தாக்குதல் ஏற்பட்டு உள்ளது.  அந்நாட்டின் பசிபிக் கடலோர பகுதியின் மைய பகுதியில் கிழக்கு நோக்கி புயல் நகர்ந்து செல்கிறது.

இந்த புயலால் மணிக்கு 67 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.  இதனால், நாகசாகி, புகுவோகா மற்றும் சாகா ஆகிய மாகாணங்களில் 5 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  புயலை முன்னிட்டு ஜப்பானின் ஷிகோகு மற்றும் கியூஷு ஆகிய தீவுகளின் தென்மேற்கு பகுதிகளில் மொத்தம் 49 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


Next Story