உலக செய்திகள்

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.3 கோடியை தாண்டியது + "||" + Vaccines administered so far in US has exceeded 383 million

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.3 கோடியை தாண்டியது

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.3 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 38,30,38,403 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி (புதன்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 38,22,94,795 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 21,07,00,361 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,00,86,143 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று 6-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
2. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
3. கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்
கொரோனா தடுப்பூசி விவகாரம்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம்.
4. “புதுச்சேரியில் விரைவில் 100% தடுப்பூசி செலுத்தப்படும்” - தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
புதுச்சேரி விரைவில் 100% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக மாறும் என துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.