சோமாலியாவில் அரசியல் நெருக்கடி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை


சோமாலியாவில் அரசியல் நெருக்கடி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 18 Sep 2021 11:54 PM GMT (Updated: 18 Sep 2021 11:54 PM GMT)

சோமாலியாவின் அரசியல் நெருக்கடி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது.

மொகதீசு, 

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசியல் நெருக்கடி மோசமாகி இருக்கிறது. இதனால் அங்கு தேசிய தேர்தல்கள் மேலும் தாமதம் ஆகவும், கிழக்கு ஆப்பிரிக்காவில் ஸ்திரத்தன்மை மேலும் சீர்குலையவும் வாய்ப்பு இருப்பதாக அச்சுறுத்தல் உள்ளது. 

இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி சோமாலியாவின் மோசமான அரசியல் நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறது. இதுதொடர்பாக  ஐ.நா.வின் சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஸ்வான், சோமாலியாவில் பிரதமருக்கும் ஜனாதிபதியுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து தீவிர கவலை தெரிவித்தார்.

Next Story