உலக செய்திகள்

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பூமிக்கு திரும்பினர் + "||" + SpaceX Capsule With 1st All-Civilian Orbital Crew Splashes Down Off Florida

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பூமிக்கு திரும்பினர்

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பூமிக்கு திரும்பினர்
'பால்கன் 9' ராக்கெட்டில் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்தனர்.
வாஷிங்டன்,

உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இன்ஸ்பிரேஷன் 4 என்னும் விண்வெளி சுற்றுலா பயணத் திட்டத்தைத் தொடங்கினார். 

இது பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் திட்டம். இந்த திட்டத்தின்படி கடந்த வியாழக்கிழமை, 'பால்கன் 9' ராக்கெட்டில் 4 பேர் கொண்ட குழுவினர் விண்வெளிக்கு பயணம் செய்தனர்.  3 நாட்களாக பூமியிலிருந்து 375 மைல் (575 கி.மீ) உயரத்தில்  விண்வெளியில் இருந்தனர். 

விண்வெளி சுற்றுலா மேற்கொண்ட நான்கு பேரும் பத்திரமாகத் தரையிறங்கினர். அட்லாண்டிக்கில் புளோரிடோ கடற்கரையில் அவர்கள் பாதுகாப்பாக தரை யிறங்கினர். இதன் வீடியோவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து விண்வெளி சென்று திரும்பியவர்களுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலன் மஸ்க் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வியாழன் கிரகத்திற்கு செல்லும் விண்கலம் இன்று பயணத்தை தொடங்கியது
வியாழன் சிறுகோள்களை ஆராய்ச்சி செய்யும் லூசி என்ற விண்கலத்தை நாசா இன்று விண்ணில் ஏவியது.
2. நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனுடன் 28-ந் தேதி கலந்துரையாடல்
நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனுடன் 28-ந் தேதி கலந்துரையாடல் அமெரிக்க துணை தூதரகம் ஏற்பாடு.
3. அதிவேக இணைய சேவைக்காக 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.