உலக செய்திகள்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது பிரான்ஸ் கோபம் + "||" + Nuclear submarine affair: France angry over US, Australia

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது பிரான்ஸ் கோபம்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா மீது பிரான்ஸ் கோபம்
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விவகார சர்ச்சையை தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து, தூதரை பிரான்ஸ் திரும்பப்பெற்றது சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன்,

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிப்போம் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் கிடைக்க உதவுவோம் எனவும் பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் கிடைப்பது உறுதியானதை அடுத்து  பிரான்ஸ் நாட்டிடம் இருந்து நீர்மூழ்கிக்கப்பலை வாங்க போட்டியிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா, ரத்து செய்தது. பிரான்சிடம் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டே 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருந்தது.

திட்டத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தை ரத்து செய்திருப்பது பிரான்சை கோபம் அடைய செய்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுடன் நல்ல நட்புறவை கொண்டிருந்த பிரான்ஸ், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்டிலிருந்தும் தனது தூதர்களை திரும்ப பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி கப்பல் கட்டுவது குறித்து, ஆக்கஸ் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு வெறும் 3 மணி நேரங்களுக்கு முன்பே பிரான்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

பிரான்சை சமாதானம் செய்ய அமெரிக்கா முயற்சி செய்தாலும், இதுவரை சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய பிரான்ஸ், அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை தங்களை அந்நியப்படுத்திவிட்டதாக கருதுகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் அடுத்தடுத்த இந்த நகர்வுகள் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. மூன்றாம் உலக போர் தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது : அமெரிக்க இராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்
மார்ச் 24,1967 ஆம் ஆண்டே வேற்றுகிரகவாசிகள் இங்கு வந்து அணு ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து அதனை முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
2. செயல்பாடுகள் மூலமே தலீபான்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா
வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகள் மூலமே தலீபான்கள் மதிப்பிடப்படுவார்கள் என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
3. விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா
குறைந்த கட்டணத்தில் விண்ணில் இருந்து பூமியை ரசிக்கும் பறக்கும் பலூன் சுற்றுலா திட்டத்தை வேர்ல்டு வியூ நிறுவனம் தொடங்கி உள்ளது.
4. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்க முடிவு - துருக்கி அதிபர் தகவல்
ரஷியாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்திருப்பதாக துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் அறிவித்துள்ளார்.
5. ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்தித்து பேசுகிறார்.