உலக செய்திகள்

பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று + "||" + Philippines logs 19,271 new COVID-19 cases

பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று

பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று
பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் புதிதாக உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,66,749 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று ஒரே நாளில் 205 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 36,788 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 லட்சத்து 51 ஆயிரத்து 765 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 1,78,196 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்சின் மணிலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலும் மற்றும் புதிய பாதிப்புகளும் காணப்படுகின்றன என்றும் தெரிவித்து உள்ளது.  அந்நாட்டில் இதுவரை 2.03 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
2. இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 49,139 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் புதிதாக 34,073 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,028 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மேலும் 25 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் 7,643 பேருக்கு கொரோனா தொற்று - 77 பேர் உயிரிழப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,643- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.