ஆப்கானிஸ்தான்: புலம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை 6.35 லட்சம்; ஐ.நா. அமைப்பு


ஆப்கானிஸ்தான்: புலம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை 6.35 லட்சம்; ஐ.நா. அமைப்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 6:22 AM GMT (Updated: 21 Sep 2021 6:22 AM GMT)

ஆப்கானிஸ்தானில் நடப்பு ஆண்டில் 6 லட்சத்து 35 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.


நியூயார்க்,

ஐ.நா. மனிதநேய அமைப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானில் வன்முறையால் 6.35 லட்சம் பேர் சொந்த இருப்பிடங்களை விட்டு புலம்பெயர்ந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இவர்களில் பஞ்ஜஷீர் மாகாணத்தில் இருந்து காபூல் நகருக்கு 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்து உள்ளனர்.  இந்த மக்களில் 1,300 பேருக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.

இதுதவிர, குனார் மாகாணத்தில் வன்முறையால் புலம்பெயர்ந்த 9,300க்கும் கூடுதலானோருக்கு ஐ.நா. அகதிகள் கழகம் நிவாரணம் வழங்கியுள்ளது.  வார்தக் மாகாணத்தின் 63 ஆயிரம் பேருக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன.

நடப்பு அக்டோபரில் இருந்து அடுத்த வருடம் ஜனவரி வரையில், பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு உலக உணவு திட்டத்தின்படி உணவு பொருட்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Next Story