கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான ஜப்பானிய இரட்டை சகோதரிகள்


கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக வயதான  ஜப்பானிய இரட்டை சகோதரிகள்
x
தினத்தந்தி 21 Sep 2021 10:49 AM GMT (Updated: 21 Sep 2021 10:49 AM GMT)

ஜப்பானில் தேசிய விடுமுறையான முதியோர் தினத்தை முன்னிட்டு அங்கு 107 வயதை கடந்த இரட்டையர்கள் உமேனோ சுமியம்மா மற்றும் கவுமே கோடமா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

ஜப்பானில் உள்ள 12.5 கோடி  மக்கள்தொகையில் சுமார் 29 சதவீதம் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று அங்குள்ள சுகாதாரம் மற்றும் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 86,510 பேர் நூறு வயது நிரம்பியவர்கள் ஆவர்.  அவர்களில் பாதி பேர் இந்த ஆண்டு 100 வயதை கடந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமேனோ சுமியம்மா மற்றும் கவுமே கோடமா இரட்டை சகோதரிகள் நவம்பர் 5, 1913 இல் மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தனர். செப்டம்பர் 1 தேதியின் படி அவர்கள் (107 வயது 300 நாட்கள்) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் 108-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளனர்.                  

Next Story