சூடான் நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி


சூடான் நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி
x
தினத்தந்தி 21 Sep 2021 11:12 AM GMT (Updated: 21 Sep 2021 11:12 AM GMT)

சூடான் நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.

ஹர்டோம்,

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்நாட்டில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். அதன்பின்னர் மக்கள் போராட்டம் மற்றும் ராணுவ கிளர்ச்சியையடுத்து ஒமர் அல்-பஷீர் சூடான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி அரசு சூடானில் ஆட்சியமைத்தது. இந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சூடானின் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் இன்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராணுவ அதிகாரிகள் சிலர் ஆட்சிகவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். ராணுவத்தின் ஒரு பிரிவினர் சூடான் தலைநகர் ஹர்டோம் மற்றும் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சித்தனர். 

ஆனால், இந்த முயற்சி ராணுவத்தின் எஞ்சிய பிரிவினரால் தடுக்கப்பட்டது. இதனால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட ராணுவ பிரிவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனனர். கைது செய்யப்பட்ட ராணுவ அதிகாரிகள் முன்னாள் அதிபர் ஒமர் அல்-பஷீரின் ஆதரவாளர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Next Story