தலீபான்கள் பங்கேற்க பாகிஸ்தான் கோரிக்கை: சார்க் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ரத்து


தலீபான்கள் பங்கேற்க பாகிஸ்தான் கோரிக்கை: சார்க் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 22 Sep 2021 5:20 AM GMT (Updated: 22 Sep 2021 5:20 AM GMT)

தலீபான்கள் பங்கேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதால் சார்க் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

நியூயார்க்,

சார்க் என்பது தெற்காசியாவின் எட்டு நாடுகளுக்கிடையேயான அமைப்பாகும். இதில் வங்காள தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

சார்க் வெளியுறவுத்துறை மந்திரிகளின்   வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சார்க் மாநாட்டில் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக கலந்துகொள்ள பாகிஸ்தான் விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் சில உறுப்பு நாடுகள் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், இதுபற்றிய ஒருமித்த கருத்து இல்லாததாலும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

தலீபான்களின் புதிய ஆட்சி இன்னும் உலகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. தலீபான்களின் உயர் மந்திரிகள் பலர் ஐ.நா.வால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story