உலக செய்திகள்

நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு காரணம் இந்தியா தான் - சொல்கிறது பாகிஸ்தான் + "||" + Pakistan: Emails threatening NZ cricketers originated in India

நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு காரணம் இந்தியா தான் - சொல்கிறது பாகிஸ்தான்

நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு காரணம் இந்தியா தான் - சொல்கிறது பாகிஸ்தான்
தங்கள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்தியாவில் இருந்து கொலைமிரட்டல் வந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
லாகூர்,

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர் நாடு திரும்புகின்றனர். 

நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தொடரை நியூசிலாந்து ரத்து செய்ததற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.  

கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் நாட்டிற்கு வந்த போதும், வருவதற்கு முன்னரும் நியூசிலாந்து வீரர்களுக்கு மிரட்டல் இமெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலின் மனைவிக்கும் இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாத் சவுதரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நியூசிலாந்து வீரர்களுக்கு அனுப்பப்பட்ட இமெயில் இந்தியாவில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. விபிஎன் செயலில் மூலம் இந்த இமெயில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அந்த இமெயிலில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடாது. ஏனென்றால் அங்கு அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்று பவாத் சவுதரி கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கைது செய்யப்பட்ட பாக். பயங்கரவாதிக்கு 14 நாள் விசாரணை காவல்
போலி ஆவணம் மூலம் 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
2. 20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு
சோகைப் மசூத் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளதால் மாற்று வீரராக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3. பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம்
பாகிஸ்தானில் ஊடக மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
4. பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது பாகிஸ்தான்: ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் மீது இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் குற்றம் சாட்டியுள்ளது.
5. பாகிஸ்தான்: மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி
பாகிஸ்தானில் மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.