உலக செய்திகள்

செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால்... ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை! + "||" + Workers in Colombia could get paid leave to grieve dead pets

செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால்... ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை!

செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால்... ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை!
செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதிசடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொலம்பியா,

செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச்சடங்கிற்காக ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

குழந்தை இல்லாத சில செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவு என ஆளும் கொலம்பியா லிபரல் கட்சி உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

கொலம்பியாவில் 10 இல் 6 வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்க்கின்றனர்.  வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட செல்லப் பிராணிகள் உயிரிழந்தால் ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது.  

யாராவது தங்கள் செல்லபிராணிகள் உயிரிழந்து விட்டதாக  பொய் சொன்னால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என லிபரல் கட்சி உறுப்பினர் அலெஜான்ட்ரோ கார்லோஸ் சாக்கோ தெரிவித்துள்ளார்.