உலக செய்திகள்

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி + "||" + The leader of CDC just made a rare call to allow Covid booster shots for more people

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி

அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி
அமெரிக்காவில் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்கா, உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். இந்த நிலையில் அங்கு மூத்த குடிமக்களுக்கும், பிற வகையில் கொரோனா தாக்கும் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் 2 ‘டோஸ்’ தடுப்பூசி போட்ட நிலையில், மூன்றாவது பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி போடுவதற்கு சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான உத்தரவில் சி.டி.சி. இயக்குனர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கி கையெழுத்து போட்டுள்ளார். இதன்படி 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும், ஆஸ்பத்திரிகளில் பணியாற்றுகிற உறைவிட பணியாளர்களுக்கும், இணை நோய்களுடன் ஆபத்தில் உள்ள 50-64 வயதினருக்கும் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்படும்.

இதனால் பல லட்சம் பேர் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள். நோய் எதிர்ப்புச்சக்தி குறைவான புற்றுநோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசியாக பைசர், மாடர்னா தடுப்பூசிகளை போடுவதற்கு அமெரிக்கா ஏற்கனவே ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
2. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.