தலீபான்கள் பயணித்த கார் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது...


தலீபான்கள் பயணித்த கார் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது...
x
தினத்தந்தி 25 Sep 2021 8:59 AM GMT (Updated: 25 Sep 2021 8:59 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயணித்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். அந்நாட்டில் தற்போது தலீபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். தலீபான்கள் ஆட்சியமைத்துள்ள போதும் அந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. ஐ.எஸ். அமைப்பும் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதனால், தலீபான்கள் - ஐ.எஸ்.ஐ.எஸ். இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள சாலையில் இன்று தலீபான்கள் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் கார் சிக்கியது. 

இந்த கண்ணிவெடி தாக்குதலில் ஒரு தலீபான் காயமடைந்ததாக தலீபான்கள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த கண்ணிவெடி தாக்குதலில் 1 தலீபான் உயிரிழந்ததாகவும், 4 பொதுமக்கள் உள்பட 7 பேர் காயமடைந்ததாகவும் நங்கர்ஹர் மாகாண மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தலீபான்கள் பயணித்த கார் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story