உலக செய்திகள்

நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள் + "||" + Witness: Taliban hang dead body in Afghan city's main square

நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்

நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் உயிரிழந்தவர்களின் உடலை தலீபான்கள் நகரின் மையப்பகுதியில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் கடுமையான சட்டங்களை பின்பற்றி ஆட்சி செய்து வருகிறது. பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தலீபான்கள் கொடூரமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஹீரட் நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களில் 4 உடல்களை தலீபான்கள் இன்று கிரேன் மூலம் கட்டி தொங்கவிட்டனர். இதனால், அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நகரின் மையப்பகுதியில் உள்ள சதுர்க்கத்தில் 4 உடல்களும் தலீபான்கள் தொங்கவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். 

உயிரிழந்த நிலையில் கிரேன் மூலம் கட்டி தொங்கவிடப்பட்ட 4 பேரும் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அவர்களை போலீசார் கொன்றதாகவும் தலீபான்கள் நகரின் மையப்பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். பரபரப்பான ஹீரட் நகரின் மையப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உடலை கட்டி தொங்கவிட்ட தலீபான்களின் செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2. டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் !
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
3. “ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும்” - ரஷ்யா வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச சமூகம் நிதியுதவி அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
4. நாட்டின் தேசிய மகளிர் வாலிபால் அணி வீராங்கனையின் தலையை துண்டித்த தலீபான்கள்
நாட்டின் வாலிபால் அணியின் அனைத்து பெண் விளையாட்டு வீரர்களும் மோசமான சூழ்நிலையிலும் விரக்தியிலும் பயத்திலும் உள்ளனர்.
5. தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் - தலீபான்
தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும் என்று தலீபான்கள் உறுதியளித்துள்ளனர்.