உலக செய்திகள்

அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி - பலர் காயம் + "||" + 3 Dead, Many Injured As Train Derails In US

அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி - பலர் காயம்

அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி - பலர் காயம்
அமெரிக்காவில் ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
வாஷிங்டன், 

அமெரிக்காவில் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சிகாகோ நகரிலிருந்து சியெட்டல் நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலில் சுமார் 141 பயணிகளும், 16 பணியாளர்களும் இருந்தனர். திடீரென்று ரெயில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டது 

இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்த ரயிலை இயக்கிய அம்ட்ராக் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அந்த ரெயில் பயணம் செய்த அனைத்து பயணிகளையும், பணியாளர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். 

மூன்று பேரின் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த உறுதியாக தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இருப்பதாக அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
2. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.3 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 85 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.