5 மாதங்களுக்கு பிறகு இந்தியா-கனடா இடையே மீண்டும் நேரடி விமான சேவை


5 மாதங்களுக்கு பிறகு இந்தியா-கனடா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
x
தினத்தந்தி 26 Sep 2021 5:38 PM GMT (Updated: 26 Sep 2021 5:38 PM GMT)

நாளை அதிகாலையில் இருந்து இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள், கனடாவில் தரை இறங்கலாம் என்று கனடா போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவத்தொடங்கியது. அதையடுத்து, இந்தியாவில் இருந்து விமானங்கள் வருவதற்கும், இந்தியாவுக்கு விமானங்கள் செல்வதற்கும் கனடா தடை விதித்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தநிலையில், இந்தியா-கனடா இடையிலான நேரடி விமான சேவைக்கு கனடா தடையை நீக்கி இருக்கிறது. நாளை அதிகாலையில் இருந்து இந்தியாவில் இருந்து வரும் விமானங்கள், கனடாவில் தரை இறங்கலாம் என்று கனடா போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இருப்பினும், விமானம் புறப்படுவதற்கு முன்பு 18 மணி நேரத்துக்குள் டெல்லி விமான நிலையத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா பரிசோதனை செய்து ‘நெகட்டிவ்’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதற்கு கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா வரவேற்பு தெரிவித்துள்ளார்.


Next Story