உலக செய்திகள்

அமெரிக்கா: விமான விபத்தில் 3 பேர் பலி + "||" + 3 dead in small plane crash in southern West Virginia

அமெரிக்கா: விமான விபத்தில் 3 பேர் பலி

அமெரிக்கா: விமான விபத்தில் 3 பேர் பலி
அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்.

அமெரிக்காவின் தென்மேற்கு வெர்ஜினியாவில் நேற்று காலை  பீச் கிராஃப்ட் சி23 என்ற சிறியவகை விமானம் நேற்று காலை  பாயெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இந்தநிலையில் சார்லஸ்டனுக்கு தென்கிழக்கே 50 மைல் (80 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள நியூ ரிவர் கோர்ஜ் பாலத்திலிருந்து சில மைல் தொலைவில் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்ததாக அங்குள்ள போலீஸ் அதிகாரி  ஒருவர் தெரிவித்தார். விமானத்திற்குள் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் அதே  பகுதியை சேர்ந்த நிக் பிளெட்சர், மைக்கேல் டாப்ஹவுஸ், மற்றும் வெஸ்லி பார்லி,   என்பது  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.