சிக்னல் செயலி முடக்கம்: மீட்டெடுப்பில் சிக்னல் குழு


சிக்னல் செயலி முடக்கம்: மீட்டெடுப்பில் சிக்னல் குழு
x
தினத்தந்தி 27 Sep 2021 7:41 AM GMT (Updated: 27 Sep 2021 7:41 AM GMT)

திடீரென சிக்னல் மெசேஜிங் செயலி செயலிழந்தது. இதனையடுத்து சேவை மீட்டெடுக்கப்படும் பணியில் சிக்னல் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

கலிபோர்னியா,

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாட்ஸ்ஆப் வெளியிட்ட புதிய பாதுகாப்பு கொள்கையின் தோல்வியால், 

மெசேஜிங் செயலி, சிக்னல்  பிரபலமானது.  இந்த செயலி பாதுகாப்பான செய்தி பரிமாற்றத்தைக் கொண்டுள்ளதால் வேகமாக புதிய பயனர்களைப் பெற்றது.

நேற்று  இரவு முதல்  சிக்னல் செயலி திடீரென செயலிழந்தது. இன்று காலை  சுமார் 1,200-க்கும் மேற்பட்ட செயலிழப்புகள் அமெரிக்காவில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த செயலிழப்புகளில் சுமார் 43 சதவீதம் பேர் பயன்பாட்டில் சிக்கல்களையும், 36 சதவீதம் பேர் செய்திகளை அனுப்புவதில் சிக்கல்களையும், சுமார் 20 சதவீதம் பேர் சர்வர் பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சிக்னல் நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சேவைகளை செயலிழப்பு பாதித்துள்ளதால் சிக்னல் தற்போது செயலிழந்துள்ளது. சேவையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் எங்கள் குழு ஈடுபட்டுள்ளது, என்று தெரிவித்து உள்ளது.

சிக்னல் செயலி பாதுகாப்பான தனியுரிமைக் கொள்கையை மையமாகக் கொண்டு 2014-இல் சிக்னல் பவுண்டேஷன் என்ற லாப நோக்கற்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.  இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் சிக்னல் செயலிழப்பை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story