உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு தலீபான்கள் அழைப்பு + "||" + Taliban ask airlines to resume international flights to Afghanistan

ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு தலீபான்கள் அழைப்பு

ஆப்கானிஸ்தானில் சர்வதேச விமான சேவைகளை துவங்குமாறு  தலீபான்கள் அழைப்பு
காபூல் விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவையை துவங்குமாறு விமான நிறுவனங்களுக்கு தலீபான்கள் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்து சரி செய்யப்பட்டு விட்டன. சர்வதேச மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் விமான நிலையம் தயாராகவுள்ளது. முன்பு போல் அனைத்து விமானங்களையும் இயக்க விமான நிறுவனங்கள் முன் வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் துவங்கியதும் கடந்த  ஆகஸ்ட் 15  தேதி  ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க ராணுவம், ஆகஸ்ட்30-ம் தேதி அங்கிருந்து வெளியேறியது.  எனினும், குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானுக்கான வழக்கமான வர்த்தக விமான சேவை இன்னும் தொடங்கவில்லை. 


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் விமானம் மூலம் வெளியேறிய 28 அமெரிக்கர்கள்!
கத்தார் விமானம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 28 அமெரிக்கர்கள் வெளியேறி உள்ளனர்.
4. ரஷ்ய அதிபர் புதினுடன் இம்ரான் கான் பேச்சு- ஆப்கான் விவகாரம் குறித்து ஆலோசனை
ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேசினார்.
5. உயர் கல்வி கற்க பெண்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கும் தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.